23 thoughts on “எனது கவிதைகள்

      1. என் தாய் வீடு..

        முன்பெல்லாம் எனக்கு
        அம்மா என்று அழைக்கவாவது
        ஒருத்தி இருந்தாள்
        என்றேனும் அவளைப் பார்க்கப்
        போகையில் மாத தவணையில் பணம் கட்டியேனும்
        எனக்கொரு புடவை வாங்கி
        வைத்திருப்பாள்
        முடியாவிட்டாலும்
        எழுந்து எனக்குப் பிடித்ததை
        பார்த்துப் பார்த்து சமைத்துத் தருவாள்
        உதவி செய்யப் போனால்கூட
        வேண்டாண்டி இங்கையாவது நீ
        உட்கார்ந்து தின்று போ; அங்கே உனக்குத் தர யாரிருக்கா? என்பாள்.
        என்னதான் நான் பேசாவிட்டாலும்
        இரண்டொரு நாளைக்கேனும்
        எனை அழைத்து எப்படி இருக்க..
        என்னடி செய்த..
        உடம்பெல்லாம் பரவாயில்லையாயென்று கேட்பாள்
        இப்போது எனக்கென்று யாருமேயில்லை.
        நானெப்படி இருக்கேனோ என்று
        வருந்த அம்மா போல் யார் வருவா???
        அவள் ஊட்டிவளர்த்த சோறும்
        கட்டி அணைத்த அன்பையும் தர
        அவளைப்போல் இனி யாரிருக்கா???
        அம்மா இல்லாத வீடென்றாலும்
        எப்பொழுதேனும் அங்கே சென்று
        அவள் இருந்த இடத்தை, அவள் தொட்ட பொருட்களையெல்லாம்
        தொட்டுப் பார்க்க நினைப்பேன்,
        எனக்கென்று அங்கே ஏதேனும்
        வாங்கி வைக்காமலா போயிருப்பாளென்றுகூட நினைப்பேன்.
        ஒரு சொட்டுக் கண்ணீராவது
        விட்டுத் தானே போயிருப்பாள்
        இல்லாவிட்டாலென்ன, பொருளென்ன பொருள்
        எனக்கென்று அவள்
        அங்கே எத்தனை நினைவினை சேர்த்துவைத்து
        அழுதிருப்பாள்?? அந்த ஒரு சொட்டுக்
        கண்ணீரேனும் ஈரம் காயாமல் எனக்காக இருக்காதா? என்றுத்
        தோன்றும்.
        ஆனால் –
        எத்தனை இலகுவாகச் சொல்கிறதுயென் வீடு
        அம்மா இல்லாத அந்த வீட்டில்
        உனக்கென்னடி வேலையென்று!!

  1. காதல் விளையாட்டு
    கூடல்

    இருவருக்குமே வெற்றி என்பதெனில்
    எனக்கும் சந்தோஷம்தான்.

    நீ மட்டுமே வெற்றி பெறுவதானாலும்
    நான் தோற்றுபோககூட
    சித்தமாயிருக்கிறேன்.

    ஆனால்,
    இருவருமே தோற்றுபோவோம்
    என தெரிந்த பின்னும்
    ஏனடி இந்த காதல் விளையாட்டு.

  2. நீ பறித்த ஒரு பூ!

    நீ என் இதயத்தை
    பூ என்று சொன்னாய்!
    புரியவில்லை அன்று!

    புரிந்துகொண்டேன் இன்று!
    நீ என் இதயத்தை
    பறித்து சென்ற போது

  3. உன் மறு ஜென்மத்திற்காக காத்திருக்கிறேன்…………

    யாரும் இல்லாத என் இராத்திரிகள்
    மறு நிமிடம் களைந்து போகும் என் கனவுகளில்
    உன்னுடன் நான்.

    உனக்காக காத்திருப்பதை விட என்
    மரணத்திக்காக காத்திருக்கலாம்
    என் மரணம் எனக்கு சுமையானதல்ல
    நீ இல்லாத போது.

    உனது பரிசம், காதல், முத்தம், அரவணைப்பு
    அனைத்திற்காகவும் ஏங்கும் அனாதை குழந்தை தான் என் உள்ளம்.
    என் இதயம் மட்டும் தினம் தினம் இரத்தக் கண்ணீர்
    சிந்துகிறது… “நீ இல்லை”
    கண் இமைக்கும் அந்த வினாடிகளில் மட்டும் உன் பிம்பம்
    அதுவும் நிரந்தரம் இல்லை.

    நான் உன்னை பிரியவில்லை
    நீ என் அருகும் இல்லை. – ஆனால்
    உன்னை யாசிக்கிறேன் – அதை விட
    உன்னை நேசிக்கிறேன் – ஆனால்
    என் முச்சு காத்தோடு மட்டும் தான் உன் உரசல்கள்..
    நீ காத்தோடு தானே கலந்து விட்டாய்
    என் உயிரில் கலந்தது போல…

    என் உயிர் நீ இல்லை,
    அர்த்தம் இல்லாதது தான் என் பயணம்
    ஆனாலும் தொடர்கிறேன் உனக்காக,
    உன் மறு ஜென்மத்துக்காக…
    நம் குழந்தையாகவாவது நீ பிறப்பாய்
    என்ற நம்பிக்கையில் உன்னை சுமக்கிறேன்
    இனி உனக்கு மரணமே இல்லாத என் கருவறையில்..
    \

  4. நான் பிறந்த பொழுதோ கண் கொஞ்சும் அழகு
    ஆனால் இன்றோ நான் காய்ந்து போன சருகு
    என் அன்னை எனக்கு தாய்ப்பால் கொடுக்கவில்லை
    என் உடலோ வேறு பாலுக்கு ஒத்துழைக்கவும் இல்லை
    அதன் விளைவோ என் உடலை கரைத்து கொண்டிருக்கும் கிருமிகள்!
    என் நலிந்த உடலில் பல அம்புகள் தோய்த்தது போன்ற உணர்வு
    ஆயினும் என் தாய்ப்பாலின் ஏக்கம் என் அன்னைக்கு புரியவில்லை
    வாழ்வின் கசப்பை மட்டுமே நான் அனுபவிக்கின்றேன்
    தாய்பாலின் சுவை தெரிந்திருந்தால் இனிமையையும் அனுபவித்திருக்க முடியும்!
    ஐந்தறிவு விலங்கான பசு கூட தன் கன்றிற்கு தன் பால் கொடுத்து தான் பசி ஆற்றும்
    என் பிஞ்சு முகத்தை பார்த்தும் கூட என் அன்னைக்கு தோன்றவில்லை தாய்ப்பால் கொடுக்கவேண்டும் என்று
    யாரேனும் உணர்த்துங்கள் என் அன்னைக்கு தாய்ப்பால் “அருமருந்து” என்று!

  5. என் தாய் வீடு..

    முன்பெல்லாம் எனக்கு
    அம்மா என்று அழைக்கவாவது
    ஒருத்தி இருந்தாள்
    என்றேனும் அவளைப் பார்க்கப்
    போகையில் மாத தவணையில் பணம் கட்டியேனும்
    எனக்கொரு புடவை வாங்கி
    வைத்திருப்பாள்
    முடியாவிட்டாலும்
    எழுந்து எனக்குப் பிடித்ததை
    பார்த்துப் பார்த்து சமைத்துத் தருவாள்
    உதவி செய்யப் போனால்கூட
    வேண்டாண்டி இங்கையாவது நீ
    உட்கார்ந்து தின்று போ; அங்கே உனக்குத் தர யாரிருக்கா? என்பாள்.
    என்னதான் நான் பேசாவிட்டாலும்
    இரண்டொரு நாளைக்கேனும்
    எனை அழைத்து எப்படி இருக்க..
    என்னடி செய்த..
    உடம்பெல்லாம் பரவாயில்லையாயென்று கேட்பாள்
    இப்போது எனக்கென்று யாருமேயில்லை.
    நானெப்படி இருக்கேனோ என்று
    வருந்த அம்மா போல் யார் வருவா???
    அவள் ஊட்டிவளர்த்த சோறும்
    கட்டி அணைத்த அன்பையும் தர
    அவளைப்போல் இனி யாரிருக்கா???
    அம்மா இல்லாத வீடென்றாலும்
    எப்பொழுதேனும் அங்கே சென்று
    அவள் இருந்த இடத்தை, அவள் தொட்ட பொருட்களையெல்லாம்
    தொட்டுப் பார்க்க நினைப்பேன்,
    எனக்கென்று அங்கே ஏதேனும்
    வாங்கி வைக்காமலா போயிருப்பாளென்றுகூட நினைப்பேன்.
    ஒரு சொட்டுக் கண்ணீராவது
    விட்டுத் தானே போயிருப்பாள்
    இல்லாவிட்டாலென்ன, பொருளென்ன பொருள்
    எனக்கென்று அவள்
    அங்கே எத்தனை நினைவினை சேர்த்துவைத்து
    அழுதிருப்பாள்?? அந்த ஒரு சொட்டுக்
    கண்ணீரேனும் ஈரம் காயாமல் எனக்காக இருக்காதா? என்றுத்
    தோன்றும்.
    ஆனால் –
    எத்தனை இலகுவாகச் சொல்கிறதுயென் வீடு
    அம்மா இல்லாத அந்த வீட்டில்
    உனக்கென்னடி வேலையென்று!!

Leave a reply to அழகியத் தருணங்கள் Cancel reply