#வர்ணம்

Uncategorized

#வர்ணம்
வானத்தில்
வண்ணங்களால் அழகானது வானவில்,
மனிதர்களில்
வர்ணத்தால் அழிகிறது ஒற்றுமை!
//வர்ணம் – சாதி முறை.
– கு.பாரதிமோகன்.

http://www.fb.com/bharathimohan.gurusamy
http://www.fb.com/bharathimohan.kavithaikal

அவலங்கள்

Uncategorized

#கற்பழிப்புகள், #முறையற்ற காதல் ,சொல்ல முடியாத எத்தனையோ.

யார் கொடுத்த சாபமோ,
எந்த வினையின் பயனோ,
என்று தொடங்கிய அவலமிது,
நாகரீகம் கற்பித்த தமிழினம்
தடுமாறுவது தகுமோ,
அறியாமையின் தண்டணையாக
உயிர்கள் கருகுவது
முற்றுபெறுவது எப்போது,
தமிழ்த்தாய் தலைமுறைகளே
சகோதர சகோதரிகளே
நம்மை நாமே
உணர்வது எத்தருணம்,
என்னதான் பாழாய்ப் போன காரணமோ
மேற்கத்திய கலாச்சார நாட்டமோ?
போதையாகிவிட்ட இணையதளங்களோ?
மெத்தப் படித்துவிட்டதால்
மேதையாக நினைத்து
புதிய நாகரீகத்திற்கு முற்படுகிறோமோ?
களவு மறைவிலிருத்தலே அழகு,
வெளிச்சத்திற்கு வந்தால்…
மனிதன் முகமூடியைக் கிழித்து
மிருகமாகி நிற்கிறான்.
வேதனையில் வார்த்தைகள்
தறிகெட்டு ஓடுவதால்
முடிவை தொடுகிறேன்!
-இது என் சொந்தக் கருத்து மட்டுமே.
-எங்கேனும் முகம் சுளிக்க வைத்திருந்தால் மன்னிக்கவும்.
-கு.பாரதிமோகன்.

http://www.fb.com/bharathimohan.gurusamy
http://www.fb.com/bharathimohan.kavithaikal

மழை முத்தங்கள்

Uncategorized

நண்பகல் சுட்டெரித்த 100° க்கு
100 ன் மடங்குகளாய்
மழைத் துளிகளின் முத்தம்!
மேகங்களின் கருணை!
-கு.பாரதிமோகன்.

http://www.fb.com/bharathimohan.gurusamy
http://www.fb.com/bharathimohan.kavithaikal