என் அம்மா

Uncategorized

நான் பிறக்க
சுமந்திருந்தாள்

நான் சிரிக்க
உயிர் தந்தாள்

நான் தவழ
பாசம் தந்தாள்

நான் வளர
ஊக்கம் தந்தாள்

நான் படிக்க
விழித்திருந்தாள்

நான் வெல்லவே
நம்பிக்கை தந்தாள்

எனது வலிக்கு
கண்ணீர் விட்டாள்

இன்னும் எத்தனையோ தந்தாள்

“என் அம்மா”

காலை பொழுது

Uncategorized

உன்னால் நேசிக்கப்படவே

ஜன்னலுக்கு வெளியே உலகம்.

திறந்திடு ஜன்னலை

மனதையும் கொஞ்சம் 🙂

தென்றலும் உனைத் தழுவட்டும்

பூக்களும் உன்னிடம்

புன்னகை கற்கட்டும். 🙂