ஆசையில் ஓர் தினம்…

Uncategorized

ஒரு சிற்றுண்டி சாலையில்
உன் கரங்கள் பிணைந்திருக்க
உணவு காத்திருக்க
நாம் காதலிக்க
விழிகளிலே நேசம் பேச
இதழ்களில் புன்னகை கசிய
நொடிகளைக் கரைப்போமே!
அன்பே!!!
மூழ்கிய இன்ப ஆழியில் !!! 🙂

முடிவில்லா நேசம்

Uncategorized

யுகங்களைக் கரைப்பாள் பேச்சாலே!

மனதை வருடினாள் புன்னகையாலே!

இதயம் நுழைந்தாள் அன்பாலே!

துணையாக வந்தாள் காதலாலே!

துன்பம் தொலைத்தாள் ஆறுதலாலே!

கடைசி வரை வந்தாள் நேசத்தாலே!

கலையாதே கனவே!!!

Uncategorized

இமையசைவில் எனை மாற்றி

இதழசைவில் மனம் வீழ்த்தி

மூச்சுக் காற்றில் வருடி

முகத்தை விட அதிகமாக

இதயம் காட்டி

இனிய அன்பில் ஈர்த்தவள்

என்னருமை துணையவள்

என்றும் கலையா கனவில்…

விமோட்சனம்

Uncategorized

இரவில் நிலவானவளே!

இமைகளில் நிலையானவளே!

மனதின் கவிதையே!

அடி

பேரழகுப் பெண்ணே!!!

உனது கடைக்கண்

கொஞ்சம் திருப்படி

வேண்டி நிற்கிறேன்

உன் பார்வையில்

காதல் விமோட்சனம் பெற…