நட்சத்திரம்

Uncategorized

எந்தத் தேவதை
கோலமிட இட்டப் புள்ளிகளோ
நட்சத்திரங்கள்!
புள்ளிகளே இத்துனை அழகெனில்
கோலத்தின் அழகினை
விவரிக்க மொழி போதுமோ!
– கு.பாரதிமோகன்.

http://www.fb.com/bharathimohan.gurusamy
http://www.fb.com/bharathimohan.kavithaikal

நண்பனுக்கு…

Uncategorized

எம் மனதினுள்
நாட்குறிப்பின் பக்கங்கள்
முன்னோக்கி புரள்கிறது
காட்சிகளால் விளக்குகிறது
நண்பர்களின்
மெய் முகங்கள் தெரியுதே
எனக்கான இடம் புரிகிறேன்
காலம் கடந்து
அறியாமை அறிகிறேன்.,
உண்மை நட்பிற்கு
வணக்கம் நண்பனே!
-கு.பாரதிமோகன்.

http://www.fb.com/bharathimohan.gurusamy
http://www.fb.com/bharathimohan.kavithaikal

உணர்வுகளால் நேசம்

Uncategorized

விழிகள் மோதிக்கொள்ளாமல்
நீயும் நானும்
நேருக்கு நேரான
சந்திப்புகளைத் தவிர்க்கிறோம்
இருந்தும்…
உள்ளுணர்வுகளால் – நேசம்
நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.     
-குருசாமி பாரதிமோகன்.

http://www.fb.com/bharathimohan.gurusamy
http://www.fb.com/bharathimohan.kavithaikal

நண்பர்களுக்கு…

Uncategorized

என்னுடன் தங்கள்
நட்பைப் பகிர்ந்த
இனியவர்களே!!!
இரவு வணக்கம்.
நட்பெனும்
தீஞ்சுவையை உணர
உள்ளத்தால் இடமளித்தவர்களுக்கு
ஓராயிரம் நன்றிகள்.!
-குருசாமி பாரதிமோகன்.

http://www.fb.com/bharathimohan.gurusamy
http://www.fb.com/bharathimohan.kavithaikal

🌹உண்மை🌹

Uncategorized

image

என் கல்லூரிக் காலத்து
பயணச் சீட்டுகளையும்
சேமித்து வைத்தேன்
அவற்றில்
நான் ஒவ்வொரு நாளும்
உனக்கான – நேச
மடலை வரைந்திருப்பதால்.
-குருசாமி பாரதிமோகன்.

http://www.lovablemoments.wordpress.com
http://www.fb.com/bharathimohan.kavithaikal

💐என் கல்லூரி💐

Uncategorized

தொடக்கத்தில்
கல்விக் கூடம் மட்டும்தான்
என்று நினைத்தேன்
பிரியும் போதுதான் உணர்ந்தேன்
இங்கு
ஒவ்வொரு இடத்திலும்
எத்தனையோ நினைவுள்
உறை கொண்டிருப்பதை.,
இது
கல்லூரி மட்டுமல்ல
மற்றொரு
கருவரையும் தான்,
பயமறியா வாழ்க்கை
கல்லூரிப் பருவம்
பாடங்களை விட
வாழ்க்கையை உணர்கிறோம்.
-குருசாமி பாரதிமோகன்.
          🌿

http://www.lovablemoments.wordpress.com
http://www.fb.com/bharathimohan.kavithaikal